விவசாயம் -2
முதல் பதிவில் வயல் வரப்பு என்று சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்
.இப்போது விவசாயத்தின் அடிப்படை வேலையான விதை விதைத்தல் நாற்று
வளர்த்தல்..அதிக பரப்பளவு நிலங்கள் உடைய நிலச்சுவான்தார்கள் நாற்றுகள் வளர்ப்பதற்கு
ஒரு வயலையே வைத்திருப்பார்கள் . மற்றவர்கள் தங்கள் வயலின் ஒரு பகுதியில் நாற்று
வளர்ப்பார்கள் .விதை நெல் மிகவும் பதப்படுத்தப்பட்டது .முந்தய அறுவடையின் போது
விளைந்த நெல்மணிகளை நன்கு வெயிலில் காய வைப்பார்கள் .பின் பெரும் மண் குதிரில்
போட்டு மூடி வைத்து விடுவார்கள் .பெரிய மண் ஜாடி ஐந்து அடி உயரம் இருக்கும் இதுவே
எங்கள் ஊரில் குலுக்கை அல்லது குதிர் என்று சொல்வோம் .
விதையை தூவும் முன் நாற்று வளர்க்கும் இடத்தை நன்கு உழுது தண்ணீர் நிறைத்து
ஈரப்பதமாக வைத்திருப்பார்கள் .நெல் பூமியில் பதியும் அளவுக்கு ஈரப்பதம் இருக்கும் .பின்
ஒரு நார் பெட்டியில் நெல்விதைகளை எடுத்து கொண்டு ஆண்டவனை வேண்டி கொண்ட
பின் கை நெறைய நெல்மணிகளை எடுத்து அந்த குறிப்பிட்ட இடத்தில் தூவுவார்கள்
.சொல்லப்போனால் மிக மெதுவாக விசிறி அடிப்பார்கள் .அது ஒரு அழகான காட்சி .
அடுத்து நாற்று வளர்வதை கண்காணித்து நன்றாக வளர்ந்ததும் நாற்று பிடுங்க
ஆரம்பிப்பார்கள் .அநேகமாக 15-20 நாட்களில் விதை வேரூன்றி முளை இட்டு நாற்று
செழித்து வளர்ந்து வெளியே வந்து விடும் .நாற்று பிடுங்குவதற்கு முன் அது இருக்கும்
நிலபரப்பில் நீர் பாய்ச்சி அந்த இடம் சேறாகி விடும் .தண்ணீர் சேர்ந்து இருந்தால் தான்
நாற்றுக்களை வேரோடு பிடுங்க முடியும் .அந்த பெண்கள் இரு கைகளாலும் மிக லாவகமாக
நாற்றுக்களை பிடுங்குவார்கள் .பூமி தாய்க்கும் வலிக்காமல் அவள் குழந்தைகள்
நாற்றுக்களுக்கும் சேதம் இல்லாமல் எடுப்பார்கள் .பின் சிறு சிறு கட்டுக்களாக கட்டி
வரப்பில் வைப்பார்கள் .இதற்கு நாற்றுமுடி என்று பெயர்.அதற்கு அடுத்தபடியாக
நாற்றுமுடிகளை பெரிய கட்டுகளாக கட்டி ஒவ்வொருவரும் தலையில் சுமந்து வயலுக்கு
செல்வார்கள் .அங்கும் வயல் நன்றாக உழப்பட்டு தண்ணீர் தேங்கி மண் ஈரப்பதமாக
இருக்கும் .பின் பெண்கள் நாற்றுமுடிகளை பிரித்து அதில் இருந்து இரண்டு இரண்டு
நாற்றுக்கன்றுகள் கையில் எடுத்து நடுவார்கள் .ஒவ்வொரு கன்றுக்கும் இடையே சீரான
இடைவெளி விட்டு நடுவார்கள் .நட்டு முடித்த பின் பார்த்தால் நூல் பிடித்தாற்போல் ஒரே
கோட்டில் இருக்கும் .அவர்கள் வேறு எந்த விதமான இயந்திரங்களும் பயன் படுத்தாமால்
கண் அளவை வைத்தே சீராக வேலை செய்வார்கள் . வயலுக்கு உரியவரின் பெண்
குழந்தைகள் வந்தால் முதலில் அவர்கள் கையில் கன்றுகளை கொடுத்து நட சொல்வார்கள்
.எனக்கு அந்த பாக்கியம் கிடைத்ததுண்டு .நான் என் பாட்டியின் கூட வயலுக்கு செல்வேன்
.அப்போது இந்த அனுபவம் கிடைக்க பெற்றேன் .ஒரு முடி நாற்று நட்ட பின்பே நான்
வெளியே வருவேன் . ஆக இப்படியாக நாற்று நாடும் வைபவம் முடிந்தது
களவாணி எனும் திரைப்படத்தில் ஓவியா நாற்று நட்ட பின் அவள் நட்ட பயிர் செழித்து
வளர்ந்திருக்கிறதா என்று பார்ப்பது போல் நான் பார்த்ததில்லை ![]()
![]()
![]()
.அது போல்
நாற்றுகட்டுக்களை காட்டி அந்த வழி செல்வோரிடம் பணம் வாங்குவது போல் சில
திரைப்படங்களில் காட்டி உள்ளார்கள் .எங்கள் ஊர் பக்கம் அப்படி நடப்பதில்லை .
Comments
Post a Comment