விவசாயம்-4
இது வரை விதை விதைத்தல் , நாற்று வளர்த்தல் , நாற்று நடுதல் , களை எடுத்தல் , நீர் பாய்ச்சுதல் பற்றி பார்த்தோம் . இனி முற்றிய நெற் கதிர்களை அறுத்தல் பின் நெல் மணிகளை கதிரிலிருந்து பிரித்து எடுத்தல் வீடு வந்து சேர்த்தல் பற்றி தெரிந்து கொள்ளலாம் . பொதுவாக குறுகிய கால பயிர் நீண்டகால பயிர் என்று இரு வகைகள் உள்ளன . குறுகிய கால பயிர் மூன்று மாதங்களில் விளைந்து விடும் . மற்றொன்று ஆறு மாதகாலம் எடுக்கும் . எனக்கு சில வகை நெல் பெயர்கள் தெரியும் . அவை கொட்டாரம் சம்பா , அரிக்கிராவி , ஆனை கொம்பன் , சம்பா , அம்பை 36, ஆடுதுறை 27. எங்கள் ஊர் பக்கம் அரிக்கிராவி சம்பா ஆனை கொம்பன் என்ற வகை நெல்விதைகளே விதைக்கப்படும் . ஏன் என்றால் இவை அனைத்தும் வாய்க்கால் பாசனம் அதாவது வாய்க்கால் நீர் பயன்படுத்தப்படும் . வருடத்துக்கு ஒன்பது மாதங்கள் நீர் வரத்து இருக்கும் . அதனால் முதல் மூன்று மாதங்கள் ஒரு பயிர் வளர்த்து அறுவடை செய்வார்கள் . அடுத்த பயிர் ஆறு மாதப் பயிர் . இந்த ஆறு மாதப் பயிரில் விளைந்த நெல்மண...