விவசாயம்-4

 இது வரை விதை விதைத்தல் ,நாற்று வளர்த்தல் ,நாற்று நடுதல் ,களை எடுத்தல் ,நீர்

பாய்ச்சுதல் பற்றி பார்த்தோம் .இனி முற்றிய நெற் கதிர்களை அறுத்தல் பின் நெல்

மணிகளை கதிரிலிருந்து பிரித்து எடுத்தல் வீடு வந்து சேர்த்தல் பற்றி தெரிந்து கொள்ளலாம் .


பொதுவாக குறுகிய கால பயிர் நீண்டகால பயிர் என்று இரு வகைகள் உள்ளன.குறுகிய கால

பயிர் மூன்று மாதங்களில் விளைந்து விடும் .மற்றொன்று ஆறு மாதகாலம் எடுக்கும் .எனக்கு

சில வகை நெல் பெயர்கள் தெரியும் .அவை கொட்டாரம் சம்பா ,அரிக்கிராவி ,ஆனை

கொம்பன் ,சம்பா ,அம்பை 36,ஆடுதுறை 27.எங்கள் ஊர் பக்கம் அரிக்கிராவி சம்பா ஆனை

கொம்பன் என்ற வகை நெல்விதைகளே விதைக்கப்படும்.ஏன் என்றால் இவை அனைத்தும்

வாய்க்கால் பாசனம் அதாவது வாய்க்கால் நீர் பயன்படுத்தப்படும் .வருடத்துக்கு ஒன்பது

மாதங்கள் நீர் வரத்து இருக்கும் .அதனால் முதல் மூன்று மாதங்கள் ஒரு பயிர் வளர்த்து

அறுவடை செய்வார்கள் .அடுத்த பயிர் ஆறு மாதப் பயிர் .இந்த ஆறு மாதப் பயிரில்

விளைந்த நெல்மணிகளே பொங்கலுக்கு உபயோகப்படும் .



அநேகமாக அரிக்கிராவி குறுகிய கால பயிராக இருக்கலாம் .ஆனை கொம்பன்,சம்பா ஆறு

மாதப் பயிராக இருக்கலாம் .கொட்டாரம் சம்பா என்பது பெரிய அரிசி சிவப்பு நிறத்தில்

இருக்கும் .இது வானம்பார்த்த பூமி என்று சொல்லப்படும் கிராமங்களில் விளைவிக்கப் படும் 

.இங்கு வாய்க்கால் வசதிகள் இல்லை .மழை பெய்து குளம் நிரம்பியதும் விவசாயம்

ஆரம்பிப்பார்கள் .கிணறுகள் உண்டு  குளம் நிரம்பியதும் கிணறுகளும் நிறைந்து விடும்

.அதனால் குளத்து நீர் வற்றினாலும் கிணற்று நீர் கை கொடுக்கும் .கடின உழைப்பாளிக்கு

கொட்டாரம் சம்பா அரிசி தான் வயிறு நிறைந்து இருக்கும் .சத்து நிறைந்தது .




முதலில் நெல் மணிகள் தோன்றியதும் பால் பிடித்து விட்டது என்று சொல்வார்கள் .ஆக நெல்

விளைந்ததும் கதிர்களை அறுத்து பெரிய பெரிய கட்டுக்களாக கட்டி களத்து மேட்டுக்கு

கொண்டு வருவார்கள் .களத்து மேடு என்பது கதிரில் இருந்து நெல் மணிகளை பிரித்து

எடுக்கும் இடம் .பெரிய கட்டில் இருந்து சிறு சிறு கட்டுகள் கதிர்களை பிரித்து அதை

சுற்றிலும் கயிறு கட்டி ,அந்த கயிற்றின் முனையை இரு கைகளிலும் பிடித்து கொண்டு

தரையில் ஓங்கி அடிப்பார்கள் .அப்போது நெல்மணிகள் கதிரில் இருந்து உதிர்ந்து விடும்

.இப்படி இரண்டு மூன்று தடவை அடித்து விட்டு சற்று தள்ளி வீசுவார்கள் .எல்லா

கட்டுகளையும் ஓங்கி அடித்து நெல் மணிகளை பிரித்த பின் ஒரு இடத்தில் போடுவார்கள்

.அங்கு இரண்டு காளை மாடுகளை ஒரு நீண்ட கம்பில் இரு முனைகளிலும் கட்டி அந்த கதிர்

குவியல் மேல் சுத்தி சுத்தி நடக்க விட்டு கதிர்களில் ஏதேனும் நெல் ஒட்டி கொண்டிருந்தால்

உதிர்க்க செய்வார்கள் .இதற்கு பெயர் பிணை அடித்தல் .ஒரு ஓரமாக குவித்து

வைத்திருக்கும் நெல் மணிகளை முறத்தில் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக கீழே விழ

செய்வார்கள் .பின் முறங்களால் வீசி நெல்லில் உள்ள தூசு தும்புகளை நீக்குவார்கள் .அதன்

பின் சாக்கு மூட்டையில் கட்டி மாட்டு வண்டியில் வீட்டுக்கு கொண்டு வருவார்கள் .முதல்

கதிர் அறுத்ததும் ஒரு கைப்பிடி அளவு கதிர்களை தனியாக எடுத்து வைத்து வீட்டுக்கு

கொண்டு வந்து வாசல் நிலையில் கட்டி வைப்பார்கள் .இது என்ன சம்ப்ரதாயம் என்று

தெரியவில்லை .நாற்கதிர் என்று சொல்வோம் .








Comments

Popular posts from this blog

Generation Gap

KITCHEN MEDICINE