விவசாயம் -வாழ்வின் உயிர்நாடி
வான் உயர வரப்பு உயரும்
வரப்பு உயர நீர் உயரும்நீர் உயர நெல் உயரும்
நெல் உயர கோல் உயரும்
கோல் உயர குடி உயரும்
நம் தமிழ் கவிஞர் அவ்வையார் எழுதியது மேலே உள்ள கவிதை .இது விவசாயம் ஒரு
நாட்டின்ஜீவாதாரம் என்பதை வலியுறுத்துகிறது .ஒரு நாட்டின் உயிர்நாடி விவசாயம் .அந்த
விவசாயம்அழிந்து போனதால் தான் இன்று நாட்டில் வன்முறைகள் கொலை கொள்ளை
என்று தீயவை பெருகி விட்டன .இன்றைய தலைமுறையினர் வயல்கள் பார்த்ததில்லை
.காற்றில் ஆடும்பயிர்கள் பார்த்ததில்லை .வயலில் நிறைந்த நீரில் ஒற்றைக் காலில் தவம்
இருக்கும் நாரைகளை பார்த்ததில்லை .விளைந்த நெற்கதிர்களை கொத்தி தின்ன வரும்
பறவை கூட்டங்களை பார்த்ததில்லை . இவை அனைத்தையும் நேரில் கண்டு
ரசித்திருக்கிறேன் அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .
சிறு சிறு சதுர பரப்பு நிலங்களே வயல்கள் .அவற்றை சுற்றி நான்கு பக்கங்களிலும் உள்ள
புல்பாதையே வரப்பு .இது ஒவ்வொரும் நிலத்துக்கும் எல்கை என்று கூட சொல்லலாம் இதே
போல் இன்னொரு சதுர பரப்பு நிலம் அடுத்தவருக்கு உரியதாகும் .அந்த நிலத்தை சுற்றிலும்
வரப்பு இருக்கும் .இந்த இரு வரப்புகளுக்கிடையே சிறிய நீரோடை செல்லும் .ஒரு அடி
அகலமே இருக்கும் .இந்த நீரில் கால் நனைத்து நடப்பது மிக சுகமாக இருக்கும் .சில
சமயங்களில் சிறு சிறு மீன்களும் ஓடையில் துள்ளி விளையாடும் .நாம் நடக்கும் போது நம்
பாதங்களை கொத்தி செல்லும் .என்ன ஒரு சுகானுபவம் அது .
Comments
Post a Comment