விவசாயம்-3

 



நாற்று நட்டு முடித்ததும் பயிர் வளர்ந்து விடும் என்று வயலுக்கு செல்லாமல் இருக்க கூடாது

.தினம் ஒரு முறை வயலை பார்வைஇட வேண்டும் .பயிர்களுக்கு இடையே வேறு பல

செடிகள் முளைத்திருக்கும் .அவற்றை வேருடன் பிடுங்கி எடுக்க வேண்டும் .இல்லை என்றால்

பயிருக்கு போடும் உரம் அனைத்தையும் இந்த செடிகள் உறிஞ்சி விடும் .நமக்கு தரமான

நெல் கிடைக்காது .ஆகவே களை எடுத்தல் மிக முக்கியம் .அதன் பின் பயிர்களுக்கு

தேவையான நீர் பாய்ச்ச வேண்டும் .வயல் வறண்டு விடாமல் எப்போதும் ஈரப்பதத்தோடு

இருக்க வேண்டும் .முன்னம் சொன்னது போல் வரப்புகளுக்கிடையே நீர் ஓடி கொண்டு

இருக்கும் .அவரவர்கள் தங்கள் வயலுக்கு தேவையான நீர் பாய்ச்ச முதலில் வரப்பை ஒரு அடி

நீளத்துக்கு வெட்டி எடுப்பார்கள் .அந்த இடைவெளி வழியாக நீர் வயலுக்குள் பாய்ந்து

கொண்டு இருக்கும் .தேவையான நீர் நிறைந்ததும் வெட்டிய வரப்பை மீண்டும் மண்

கொண்டு அடைத்து சீர் செய்து விடுவார்கள் .இதை வாய்மடை என்று சொல்வோம் .



அந்த காலத்தில் நீர்வரத்துக்கு மிக அருமையான வழி வகுத்து வைத்திருந்தார்கள் .மலையில்

விழும் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து வரும் .ஆற்றில் இருந்து வாய்க்கால்கள் வெட்டி

ஊருக்குள் இருக்கும் குளங்களுக்கு வந்து சேரும் .அங்கிருந்து சிறு வாய்க்கால்கள் மூலம்

வயல்களுக்கு தேவையான நீர் கொண்டு செல்வார்கள்.இதனால் விவசாயம் நன்றாக

இருந்தது .பசி பட்டினி பஞ்சம் இல்லை .இன்று மலையில் உள்ள மரங்களை அழித்ததால்

மழை இல்லை .மழை பொய்த்ததால் ஆறு குளங்கள் வறண்டு விட்டன. விவசாயம் செய்ய

முடியவில்லை .அதனால் விளைநிலங்களை விற்று வீடு கட்டுகிறார்கள் .இதுவே தன்

கண்ணை தானே குத்தி கொள்வதற்கு சமம் .கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யும்

மனித இனத்தை என்ன சொல்லி அழைக்க முடியும் .இயற்கை நம்மை வஞ்சிக்க வில்லை

.நாம் தான் இயற்கை வளங்களை அழிக்கிறோம்
















Comments

Popular posts from this blog

Generation Gap

விவசாயம்-4

KITCHEN MEDICINE